/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்சாரம், கழிவறை இல்லை ; காத்திருக்கும் 101 வயது மூதாட்டி
/
மின்சாரம், கழிவறை இல்லை ; காத்திருக்கும் 101 வயது மூதாட்டி
மின்சாரம், கழிவறை இல்லை ; காத்திருக்கும் 101 வயது மூதாட்டி
மின்சாரம், கழிவறை இல்லை ; காத்திருக்கும் 101 வயது மூதாட்டி
ADDED : மே 06, 2024 11:05 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர், 101- வயது மூதாட்டி பழனியம்மாள்.
இவர் தனது மகள் பரமேஸ்வரி, மருமகன் பால்ராஜ் உடன் வசித்து வருகிறார். மகளும் மருமகனும் மூதாட்டியை கவனித்து வரும் நிலையில், இவர்களின் வீட்டில் இரு அறைகள் மட்டுமே உள்ளன.
வீட்டிற்கு மின்சார வசதி இல்லாத நிலையில், தற்போது மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் மட்டுமே வினியோகம் செய்வதால், மண்ணெண்ணெய் விளக்கிற்கு போதுமானதாக இல்லை. இதனால், நல்லெண்ணெய் தீப ஒளியை இரவு நேரத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
கழிப்பிட வசதியும் இல்லாத நிலையில் தள்ளாத வயதில், அருகில் உள்ள அறிந்தவர் குடியிருப்புகளுக்கு சென்று பயன்படுத்தி வருகிறார்.
இதனால் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
'தனது வீட்டிற்கு மின் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும், நேரடியாக கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த, 19ல் நடந்த தேர்தலில், தனது, 101 வயதிலும் தபால் ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்த மூதாட்டி வீட்டிற்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் கிடைக்காமல் இருப்பது, மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.