/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
13,582 கி.மீ., சைக்கிள் பயணம் பந்தலுார் இளைஞருக்கு பாராட்டு
/
13,582 கி.மீ., சைக்கிள் பயணம் பந்தலுார் இளைஞருக்கு பாராட்டு
13,582 கி.மீ., சைக்கிள் பயணம் பந்தலுார் இளைஞருக்கு பாராட்டு
13,582 கி.மீ., சைக்கிள் பயணம் பந்தலுார் இளைஞருக்கு பாராட்டு
ADDED : ஆக 29, 2024 02:17 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அம்மன்காவு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் - -மாரியம்மாள் தம்பதியின் மகன் சிவப்பிரகாஷ், 25, ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏப்., 1ல், கொளப்பள்ளி என்ற இடத்தில் இருந்து சைக்கிள் பயணம் துவக்கினார்.
கன்னியாகுமரி சென்ற அவர், அங்கிருந்து, கேரளா, கர்நாடகா வழியாக ஜம்மு - காஷ்மீர், லடாக் எல்லை சென்று, சென்னை, பாண்டிச்சேரி வழியாக, 149 நாட்கள் பயணித்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று காலை சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, பந்தலுார், நீலகிரி சமூக சேவை அமைப்புகள், வியாபாரிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவபிரகாஷ் கூறியதாவது:
எனக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சற்று தெரியும். அந்த மொழிகளை பயன்படுத்தி, செல்லும் இடங்களில் என்னை அறிமுகப்படுத்தி, பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று, தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
தங்கும் இடங்களில் சுயமாக சமையல் செய்து சாப்பிடுவேன். எனக்கு ராணுவத்தினர் மற்றும் போலீசார் பல நேரங்களில் உதவியாக இருந்தனர். மொத்தம், 149 நாட்கள், 13,582 கி.மீ. பயணம் செய்துள்ளேன். இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

