ADDED : ஜூன் 26, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி கடந்த 20ம் தேதி துவங்கியது. மூன்று நாட்களில் மொத்தம் 1502 மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக இலவச வீட்டு மனை பட்டா கோரி 604 மனுக்களும், பட்டா மாறுதல் கூறி 234 மனுக்களும், மகளிர் உரிமை திட்ட தொகை கோரி 221 மனுக்களும், நில அளவை கோரி 158 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 66 மனுக்களும், பெறப்பட்டன.
மனு கொடுத்த மலர்விழி, லலிதா ஆகிய இரண்டு ஏழைப் பெண்களுக்கு தகுதி அடிப்படையில் மனு கொடுத்த சில மணி நேரத்திலேயே இலவச தையல் மெஷின்களை துணை கலெக்டர் சுரேஷ் வழங்கினார். சிலருக்கு பட்டா மாறுதல் மற்றும் முதியோர் ஓய்வூதியத்துக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் நித்திலவள்ளி, தனி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பங்கேற்றனர்.