/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னூரில் கவிழ்ந்த பிக்-அப் வாகனம் ஆந்திரா சுற்றுலா பயணிகள் 21 பேர் காயம்

ADDED : மே 20, 2024 02:38 AM
குன்னூர்;குன்னூர் பெட்டட்டி பகுதியில் பள்ளத்தில் பிக்-அப் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஆதிகோப்புலா கிராமத்தைச் சேர்ந்தவர் டிரைவர் மல்லய்யா. இவருடன் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் 3 பிக்-அப் வாகனங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
இன்று குன்னூர் சிம்ஸ் பார்க் வந்த பிறகு பவானி கூடுதுறை செல்வதற்காக கோத்தகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஒரு பிக்-அப் வாகனம் பெட்டட்டி அருகே வளைவு பகுதியில் சென்ற போது பிரேக் பிடித்த கட்டுப்பாட்டை இழந்து தாழ்வான சாலையில் பின்புறமாக வந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், காயமடைந்த 21 பேரில், 8 பேர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். குன்னூர் மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டனர். 7 பேர் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று சென்றனர்.
பிக்- அப் வாகனத்தில் பிளாஸ்டிக்கால் மூடி, உள்ளே பலகைகள் கொண்டு இரு பிரிவாக பிரித்து 21 பேர் பிக்-அப்பில் சுற்றுலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காயம் ஏதும் ஏற்படாத டிரைவர் மல்லய்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.