/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிக்--அப்' வாகனம் கவிழ்ந்து 21 சுற்றுலா பயணிகள் காயம்
/
'பிக்--அப்' வாகனம் கவிழ்ந்து 21 சுற்றுலா பயணிகள் காயம்
'பிக்--அப்' வாகனம் கவிழ்ந்து 21 சுற்றுலா பயணிகள் காயம்
'பிக்--அப்' வாகனம் கவிழ்ந்து 21 சுற்றுலா பயணிகள் காயம்
ADDED : மே 19, 2024 11:21 PM

குன்னுார்;ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த, 'பிக் -அப்' வாகனம், குன்னுார் பெட்டட்டி அருகே கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 21 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், ஆதிகோப்புலா கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் மல்லய்யா. இவரின் ஏற்பாட்டில் கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று, பிக்--அப் வாகனங்களில் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பிக்--அப் வாகனங்களிலேயே உறங்கி, ஊட்டி சுற்றுலா மையங்களை பார்வையிட்டு, நேற்று குன்னுார் சிம்ஸ் பார்க் வந்தனர். பின் பவானி கூடுதுறை செல்வதற்காக நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பெட்டட்டி அருகே வளைவில் சென்ற ஒரு பிக்--அப் கட்டுப்பாட்டை இழந்து, 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காயமடைந்த, 21 பேர் குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், கார்த்திகா பாவனா, 28, கோட்டையா, 47, வாசு, 22, ரங்கம்மா, 40, மங்கம்மா,45, வெங்கடேஷ், 63, பத்மா. 46, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் மல்லைய்யாவிடம் கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது குறித்து அருவங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

