/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் ரூ.23 கோடி வருமானம்
/
தேயிலை ஏலத்தில் ரூ.23 கோடி வருமானம்
ADDED : ஆக 13, 2024 01:51 AM
குன்னுார்;குன்னுார் தேயிலை ஏலத்தில், 23.07 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் ஏல மையத்தில்,32வது ஏலம் நடந்தது. அதில்,'17.97 லட்சம் கிலோ இலை ரகம், 4.49 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 22.46 லட்சம் கிலோ வரத்து இருந்தது. '16.57 லட்சம் கிலோ இலை ரகம், 4.38 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என,மொத்தம், 20.95 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோ,110.10 ரூபாய் என, இருந்தது. கிலோவிற்கு, 4.50 ரூபாய் விலை உயர்ந்தது.
கிராக்கி அதிகமானதால், 93.31 சதவீதம் விற்றது. 23.07 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. மற்ற அனைத்து தேயிலை துாளும் கிலோ, 100 ரூபாய்க்கு மேல் விற்றது. எனினும், கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில், 1.41 லட்சம் கிலோ வரத்தும், 1.69 லட்சம் கிலோ விற்பனையும் சரிந்தது.