தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுட்டுக்கொல்லப்பட்ட 29 காட்டுப்பன்றிகள்

சுட்டுக்கொல்லப்பட்ட 29 காட்டுப்பன்றிகள்

சுட்டுக்கொல்லப்பட்ட 29 காட்டுப்பன்றிகள்


ADDED : மே 14, 2026 12:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: விவசாய பயிர்களை நாசம் செய்த, 29 காட்டுப்பன்றிகள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டன.

பாலக்காடு மாவட்டம்,​நாகலச்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. விவசாயிகள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில், பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.

வனத்துறையின் அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த ஜாகீர் ஹுசைன் தலைமையில், இப்பகுதி விவசாயிகளும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களிலிருந்து, மொத்தம், 29 காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. காட்டுப்பன்றிகள் கொல்லப்பட்ட இடங்களை, நாகலச்சேரி கிராம பஞ்சாயத்து தலைவர் நிஷா, துணைத் தலைவர் மோகன்தாஸ், கல்வி மற்றும் சுகாதார நிலைக்குழு தலைவி சுலைகா, நலத்திட்ட நிலைக்குழுத் தலைவர் மோகனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us