/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தொட்டபெட்டா வனத்தில் 3 காட்டெருமை மர்மமான முறையில் பலி வனத்துறை விசாரணை

ADDED : ஏப் 23, 2024 10:03 PM

ஊட்டி:தொட்டபெட்டா வனப்பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஊட்டி அருகே தொட்டபெட்டா வனப்பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர், கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், தொட்டபெட்டா வனப்பகுதியில் ஒரு ஆண், இரண்டு பெண் என 3 காட்டெருமைகள் இறந்து கிடந்தன. ஒரே சமயத்தில், 3 காட்டெருமைகள் இறந்து கிடந்ததால் விசாரணை செய்து வருகிறோம்.
இந்தக் காட்டெருமையை மனிதர்களோ, விலங்குகளோ வேட்டையாடியது போன்ற அறிகுறிகள் இல்லை. இருந்தாலும் பிரேத பரிசோதனை முடித்து உடல் உள் உறுப்புகளை கோவையில் உள்ள தடயவியல் ஆய்வகம் மற்றும் சென்னையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 4 வாரங்களில் இதன் முடிவுகள் வந்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.