/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீசனுக்காக 30 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பராமரிப்பு பணிகள் துரிதம்
/
சீசனுக்காக 30 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பராமரிப்பு பணிகள் துரிதம்
சீசனுக்காக 30 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பராமரிப்பு பணிகள் துரிதம்
சீசனுக்காக 30 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பராமரிப்பு பணிகள் துரிதம்
ADDED : ஏப் 18, 2024 11:26 PM
ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏப்., மே., மாதங்களில் கோடைவிழா; செப்., அக்., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நடப்பாண்டு கோடை விழா மே மாதம் துவங்குகிறது. இதற்காக பூங்காவில் மலர்கள் தயார்படுத்துவது, கட்டமைப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பூங்காவில், இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை, பாத்திகளில், 280 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. தவிர, மாடங்களில் காட்சிப்படுத்த, 15 ஆயிரம் தொட்டிகளில் ' துலிப்' மலர்கள் பூங்கா நர்சரிகளில் தயாராகி வருகிறது.
30 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் நடவு செய்யப்பட்ட மலர்கள் உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி தயார்படுத்தும் பணியும் விரைவாக நடந்து வருகிறது. மலர் காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், மலர்களை வளர்ப்பதற்கான பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும், பூங்கா நடுவே பிரதான புல்தரை மைதானம் உள்ளது. இங்கு, சுற்றுலா பயணிகள் குடும்பத்தாருடன் ஆடி, பாடி மகிழ்வது வழக்கம். இங்கு புற்கள் பச்சை பசேலென காட்சியளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் நடந்துவருகிறது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில்,'' தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனுக்காக பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடப்பதால், மே முதல் வாரத்தில் பூங்கா தயாராகி விடும்,'' என்றார்.

