/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி "புரூக்கோலிக்கு' கிராக்கிஉற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
/
ஊட்டி "புரூக்கோலிக்கு' கிராக்கிஉற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ஊட்டி "புரூக்கோலிக்கு' கிராக்கிஉற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ஊட்டி "புரூக்கோலிக்கு' கிராக்கிஉற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 28, 2011 01:06 AM
ஊட்டி:உயர் தர உணவு வகைகளில் பயன்படுத்தப்படும், 'புரூக்கோலி' காய்கறிக்கு கிராக்கி உள்ளதால், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலைக்குத் தகுந்த விலை கிடைக்காததால் ஊட்டி, கோவையில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில், உயர் ரக உணவு வகைகள் தயாரிக்க பயன்படும் சிறப்பு காய்கறிகள் உற்பத்தியை, பல சிறு விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
இதில், புரூக்கோலி, கேப்சிகம், புஷ் பீன்ஸ், சூப் தயாரிக்கப் பயன்படும் செலரி, ரெட் கேபேஜ், வெள்ளரி உட்பட பல்வேறு காய்கறிகள் அடங்கும்.
இத்தகைய உணவுப் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்த, 'புரூக்கோலி' எனப்படும் காலிபிளவர் வகை காய்கறிக்கு, தற்போது நல்ல கிராக்கி உள்ளது.
கிலோவுக்கு, 50 முதல் 55 ரூபாய் வரை கிடைப்பதால், இதன் உற்பத்தியில் சிறு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பருவமழை தொடரும் நிலையிலும், பல்வேறு கிராமங்களில் புரூக்கோலி உற்பத்தி அதிகரித்துள்ளது. இவை, ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதோடு, கோவை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

