/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தீயை கட்டுப்படுத்த 35 கி.மீ., தீத்தடுப்பு கோடுகள்
/
வனத்தீயை கட்டுப்படுத்த 35 கி.மீ., தீத்தடுப்பு கோடுகள்
வனத்தீயை கட்டுப்படுத்த 35 கி.மீ., தீத்தடுப்பு கோடுகள்
வனத்தீயை கட்டுப்படுத்த 35 கி.மீ., தீத்தடுப்பு கோடுகள்
ADDED : பிப் 10, 2025 05:41 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோரங்களில், தீத்தடுப்பு கோடுகள் 35 கீ.மீ.,தூரம் வரை போடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9 ஆயிரம் எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் நெருங்கும் நிலையில் வனத்தில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தினால் காய்ந்த இலைகள், செடிகள் போன்றவற்றால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில் சிலர் பீடி, சிகரெட் போன்றவைகளை வீசி சென்றால், அதில் உள்ள தீ கங்குகள் வாயிலாக வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில் பீடி, சிகரெட் போன்றவைகளை பீடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சாலையோரங்களில் 35 கி.மீ.,தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது,'' என்றார்.