ADDED : ஏப் 15, 2024 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:நீலகிரி லோக்சபா தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை, 3.81 கோடியே 54 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில், 19ம் தேதி, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து, பறிமுதல் செய்யும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, வரை கணக்கில் வராத, 3.81 கோடியே 54 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். அதில், 2.67 கோடியே 76 ஆயிரம் ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அதில், அதிகபட்சமாக கூடலுார் சட்டசபை தொகுதியில்,1.11 கோடியே, 91 ஆயிரம் ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டது. அதில், 79 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

