ADDED : செப் 11, 2024 03:05 AM

கோத்தகிரி:கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி நாளன்று, அனுமன் சேனா அமைப்பு சார்பில், 40 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
நாள்தோறும், விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பூஜிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும், நேற்று மாலை, வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு அனுமன் சேனா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை, அனுமன் சேனா தேசிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் கேரள மாநில தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். கோத்தகிரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இதில், கோத்தகிரி ஒன்றிய தலைவர் சுனேஷ், பா.ஜ., நிர்வாகி ஜித்து உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.