/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ப்பு யானை சந்தோஷ்க்கு 53வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ADDED : ஆக 15, 2024 02:16 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில் 29 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். இதில் பல யானைகள், முதுமலை முகாமில் உள்ள வளர்ப்பு பெண் யானைகளின் குட்டிகள். மறைந்த ருக்கு என்ற வளர்ப்பு யானைக்கு, 1971 ஆக., 15ல் பிறந்த சந்தோஷ், என்ற யானைக்கு இன்று 53வது பிறந்தநாள்.
இதனால், முகாமில் நடந்த சுதந்திர தின விழாவை தொடர்ந்து, வனத்துறை சார்பில் வளர்ப்பு யானை சந்தோஷ்க்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. யானை விரும்பி உண்ணக்கூடிய கேழ்வரகுடன் தேங்காய், இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட கேக்கை, பாகன் மாறன், வனக்காப்பாளர் கோபால் ஆகியோர் வெட்டினர். முதுமலை துணை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு யானைக்கு கேக் ஊட்டினார்.
பாகன்கள், வன ஊழியர்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.பாகன்கள் கூறுகையில், 'சுதந்திர தினத்தில், பிறந்த சந்தோஷ் யானைக்கு, சுதந்திர தின நிகழ்ச்சியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது, மறக்க முடியாத நிகழ்வாகும்'என்றனர்.