/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு 58 வீடுகள்
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு 58 வீடுகள்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு 58 வீடுகள்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு 58 வீடுகள்
ADDED : ஆக 23, 2024 11:05 PM

மேட்டுப்பாளையம்:கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், மலைவாழ் மக்களுக்கு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் வாயிலாக, 58 வீடுகள் கட்டி முடியும் நிலையில் உள்ளன.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. இருளர்பதி, நேரு நகர், கொட்டியூர், சேத்துமடை, நெல்லிமரத்தூர், பூச்சமரத்தூர், தோண்டை, சிறுகிணர் உள்ளிட்ட பல மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள தொகுப்பு மற்றும் ஓட்டு வீடுகள் இடியும் நிலையில் இருந்தன. மலைவாழ் மக்களின் வேண்டுகோளை அடுத்து, ஊராட்சி சார்பில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா கூறியதாவது:
ஊராட்சியில் மலைவாழ் மக்களுக்கு கட்டிக் கொடுத்த வீடுகள் இடியும் நிலையில் இருந்தன. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிதாக அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மலைவாழ் மக்களுக்கு, 58 பசுமை வீடுகள் கட்டும் பணிகள், முடிவடையும் நிலையில் உள்ளன. இருளர்பதி அருகே உள்ள, நேரு நகரில் கட்டிய வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்க, மின்வாரியத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மின் இணைப்பு கிடைத்தவுடன், மலைவாழ் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு ஊராட்சி தலைவர் கூறினார்.