/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
78 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை வெலிங்டன் மைதானத்தில் மாணவ, மாணவியர் அசத்தல்

ADDED : செப் 09, 2024 09:54 AM

குன்னுார் : குன்னுாரில், 1,200 மாணவ, மாணவியர், 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர்.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் மைதானத்தில் நேற்று, தேசிய சிலம்பம் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமான நிகழ்ச்சி நடந்தது.
அதில், 78வது சுதந்திர தின விழாவையொட்டி, நேற்று 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி, ராயல் புத்தக உலகசாதனை நிகழ்த்தப்பட்டது.
அதில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சாதனைக்கான, 'ராயல்' புத்தக முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் ஜெயப்பிரகாஷ், தீர்ப்பாளர் ஹரிபிரகாசம், கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் தலைவர் வினோத் குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1200 மாணவ மாணவியர், மகளிர், பயிற்சியாளர்கள் பங்கேற்று, 78 நிமிடங்கள் சிலம்பம் சுற்றினர். சிலர்கண்களை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுற்றினர்.
முன்னதாக, பரதநாட்டியம், கராத்தே, கேரம், ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடந்தது.
பங்கேற்று சாதித்தவர்களுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.