/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் 8000 ஏக்கரில் கேரட் விவசாயம்; மலையில் தொடரும் மழை கேரட் விவசாயம் அமோகம் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூலை 11, 2024 10:31 PM
ஊட்டி : மாவட்ட முழுவதும், 8000 ஏக்கரில் கார் போக கேரட் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 'நீர்போகம், கார் போகம் மற்றும் கடை போகம்,' என, மூன்று போகத்தில் தலா, 8,000 ஏக்கரில் கேரட் விவசாயம் பயிரிட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் ஜன., மாதம் முதல் ஏப்., இறுதி வரை மழை பொழிவு எதிர்பார்த்த அளவு இல்லை.
கிணற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தை குறைத்து கொண்டனர். நீர் போக கேரட் விவசாயம், 6,000 ஏக்கரில் பயிரிடப்பட்டது.
ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் சந்தைகளில் கிலோவுக்கு சராசரியாக, 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாரான கேரட்களை தயார்படுத்தி சந்தைக்கு அனுப்பி வைக்கின்றனர். கார் போக விவசாயத்தில் மாவட்டம் முழுவதும், 8,000 ஏக்கரில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே ஆடாசோலை, கடநாடு, காரபிள்ளு, எம்.பாலாடா, கொல்லிமலை ஓர நள்ளி, கல்லக் கொரைஹாடா பகுதிகளில் அதிகளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது, பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் கேரட் தோட்டங்களுக்கு நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கார் போக விவசாயத்தில் பல ஆயிரம் ஏக்கரில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நல்லா விலை கிடைத்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் வங்கிகளில் பெற்ற கடனை அடைக்க பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.