நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;மாவட்டத்தில், சமூக அறிவியல் பாடத் தேர்வில் மொத்தம், 6,957 பேரில், 6,862 பேர் தேர்வு எழுதினர். இதில், 95 மாணவர்கள் வருகை புரியவில்லை.
தனித் தேர்வர்களில், சமூக அறிவியல் பாடத் தேர்வில் மொத்தம், 199 பேரில், 181 பேர் தேர்வு எழுதினர். இதில், 18 பேர் வருகை புரியவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்றவர்கள் மொத்தம், 263 பேர். அரசுத் தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதினர். மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில்,10ம் வகுப்பு தேர்வு எழுத தகுதியுடைய, பள்ளி மாணவர்கள், 6,957 பேரில், 6,862 பேர் தேர்வு எழுதினர். இதில், 95 மாணவர்கள் வருகை புரியவில்லை.

