/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
/
கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : ஏப் 02, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கணக்கு பாடத்தில், 6,957 மாணவர்களில், 6,862 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 95 பேர் வருகை புரியவில்லை. தனி தேர்வர்களில், கணித பாடத்தில், மொத்தம், 210 பேரில், 188 பேர் தேர்வு எழுதினர். 22 பேர் வருகை புரியவில்லை.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்ற மொத்தம், 259 மாணவர்கள். அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதினர். மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 95 பேர் வருகை புரியவில்லை.

