/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்
/
குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்
குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்
குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்
ADDED : ஜூலை 08, 2024 12:19 AM
குன்னுார்:குன்னுார் கரிமொரா ஹட்டி பகுதியில் உலா வந்த கரடி குப்பை தொட்டியில் உணவை தேடி வருவது தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வரும் இந்த கரடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குன்னுார் கரிமொரா ஹட்டி கிராமத்திற்குள் புகுந்த கரடி அங்குள்ள குப்பை தொட்டியில் உணவை தேடி வெளியேறியதை அவ்வழியாக சென்றவர்கள் 'வீடியோ' எடுத்து வைரலாக்கி உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'வனப்பகுதிகளில் தேவையான உணவு இல்லாத காரணத்தால், குடியிருப்பு பகுதிகளுக்கு உணவைத் தேடி வரும் கரடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அசம்பாவிதம் நடக்கும் முன், வனத்துறை கண்காணித்து கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.