/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் தாயை பிரிந்த காட்டெருமை குட்டி
/
குன்னுாரில் தாயை பிரிந்த காட்டெருமை குட்டி
ADDED : செப் 17, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுாரில் தாயை பிரிந்த காட்டெருமை குட்டியை நாய்கள் துரத்தி வருகின்றன.
குன்னுார் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் அதிகளவில் உலா வருகின்றன.
இந்நிலையில், குன்னுார் பேரக்ஸ் ராணுவ மையம் பகுதியில், பிறந்து சில நாட்கள் ஆன காட்டெருமை குட்டி தாயை பிரிந்த நிலையில் சாலையில் உலா வருகிறது. அவ்வப்போது நாய்களும் விரட்டுகிறது. இரவு நேரத்தில் வாகனங்களில் சிக்கி அடிபடும் அபாயமும் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு குட்டியை மீட்டு தாயிடம் சேர்க்க வேண்டும்.