/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓடையில் விழுந்து இறந்த காட்டெருமை குடிநீர் இல்லாமல் பழங்குடியினர் பாதிப்பு

ADDED : ஆக 27, 2024 08:34 PM
குன்னுார்:குன்னுார் குரும்பாடி அருகே நீரோடையில் விழுந்து இறந்த காட்டெருமையால், பழங்குடியினருக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் குரும்பாடி, புதுக்காடு கிராமங்களுக்கு இங்குள்ள நீரோடையில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த, 2 நாட்களாக குடிநீர் மாசடைந்து வந்த நிலையில், தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மாற்று இடங்களில் இருந்து குடிநீர் எடுத்து வந்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இது தொடர்பாக, பர்லியார் ஊராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வு மேற்கொண்ட போது, குரும்பாடி அருகே குடிநீர் எடுக்கும் ஓடையில், காட்டெருமை விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில், கால்நடை டாக்டரை வரவழைத்து காட்டெருமை உடலுக்கு பிரேத பரிசோதனை செய்து, புதைக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து, சுகாதார பணிகள் முடிந்த பின், குடிநீர் வினியோகம் செய்ய பர்லியார் ஊராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.