ADDED : ஆக 23, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி அறிக்கை:
நடப்பு நிதியாண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறலாம். இத்திட்டத்தில், தற்போது நிலவும் இயற்கை காலநிலை மாற்றங்கள் மற்றும் பேரிடர் போன்ற சூழ்நிலைகளால் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம். கேரட், உருளைகிழங்கு, பூண்டு, முட்டைகோஸ் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பீரிமியம் தொகை மற்றும் காப்பீடு செய்ய இறுதி நாள் விபரங்களை தோட்டக்கலை அலுவலகங்கள்; தொகையை செலுத்தும் கூட்டுறவு கடன் சங்கங்கள்; வங்கி கிளைகளை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.