/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவ, மாணவியருக்கு கல்வி சீர் வழங்கும் விழா
/
மாணவ, மாணவியருக்கு கல்வி சீர் வழங்கும் விழா
ADDED : ஜூன் 12, 2024 10:26 PM

கருமத்தம்பட்டி : ஊஞ்சப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவ, மாணவியருக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஊஞ்சப்பாளையம். இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவினரின் முயற்சியால், தன்னார்வலர்களின் உதவியோடு, தனியார் பள்ளிக்கு நிகராக மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அடையாள அட்டை, டைரிகள், புதிய மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர் பலர். பங்கேற்றனர். நிர்வாகிகள் மாணவர்களுக்கு கல்வி சீர் பொருட்களை வழங்கி வாழ்த்தினர். ஊராட்சி தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.