/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டனில் அலங்கரிக்கப்பட்ட போர் நினைவு துாண்
/
வெலிங்டனில் அலங்கரிக்கப்பட்ட போர் நினைவு துாண்
ADDED : ஆக 14, 2024 08:49 PM
குன்னுார் : சுதந்திர தின விழாவையொட்டி, குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்கம், மூவர்ண தேசிய கொடி மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வசீகரிக்கிறது.
குன்னுார் வெலிங்டனில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம்.ஆர்.சி.,), அக்னி வீரர்களுக்கும், ராணுவ பயிற்சி கல்லுாரியில் முப்படை நடுத்தர அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லுாரி நுழைவாயில் அருகே போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு போர் நினைவு சின்னம் அழைக்கப்பட்டது.
இன்று, 78 வது சுதந்திர தின விழாவையொட்டி, போர் நினைவு சதுக்கம் வண்ண விளக்குகளால் ஒளிரவிட்டு, நினைவுத்துாண் மூவர்ண தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இங்கு நின்று 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.