/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒன்றரை ஆண்டு ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
/
ஒன்றரை ஆண்டு ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
ஒன்றரை ஆண்டு ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
ஒன்றரை ஆண்டு ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
ADDED : ஜூலை 03, 2024 09:53 PM

அன்னுார் : ஒட்டர்பாளையம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆகியும் மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.
அன்னுார், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 708 குடியிருப்புகளுக்கும், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 165 குடியிருப்புகளுக்கும் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் முடிவடைந்தன. சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினமும் 36 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒட்டர்பாளையம் பகுதி மக்களுக்காக குடிநீர் விநியோகிக்க கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி ஒன்றரை ஆண்டு ஆகியும் குடிநீர் ஏற்றப்படாமல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில்,'ஊராட்சியில் அழகாபுரி நகர், ஆதவன் நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் இணைப்புக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ளவர்களுக்கும் குறைந்த அளவே வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் மேல்நிலை தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு புதிய குடி நீர் குழாய் இணைப்பு வழங்க முடியும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.