/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயிர்கள் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் பண்ணைக் குட்டை
/
பயிர்கள் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் பண்ணைக் குட்டை
பயிர்கள் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் பண்ணைக் குட்டை
பயிர்கள் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் பண்ணைக் குட்டை
ADDED : மே 01, 2024 12:03 AM
சூலுார்;வறட்சியான காலத்தில் பயிர்களின் வளர்ச்சிக்கு கை கொடுக்கும், பண்ணை குட்டை அமைக்க, விவசாயிகள் முன் வரவேண்டும், என, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:
பயிர்களின் வளர்ச்சிக்கு தண்ணீர் முக்கியமானது. கோடை மற்றும் வறட்சி காலத்தில் பயிர்களுக்கு போதுமான தண்ணீர் விட வேண்டியது அவசியமாகிறது. விளை நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து, அதில், நீரை சேமித்து, பயிர்களுக்கு பாய்ச்சுவதால், வறட்சி காலத்தில் மகசூல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் பாய்ச்சுவதால், பயிர்களுக்கு தேவையான நேரத்தில், தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தண்ணீர் விரயமாவதையும் குறைக்கலாம். வறட்சியில் இருந்து பயிர்களையும் பாதுகாக்கலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள இடத்துக்கு ஏற்ப பண்ணை குட்டை அமைக்கலாம்.
அதற்கான ஆலோசனைகள் வேளாண்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதனால், அனைவரும் பண்ணை குட்டை அமைக்க முன் வரவேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.