/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆட்டின் உடலுடன் மனு அளிக்க வந்த விவசாயி
/
ஆட்டின் உடலுடன் மனு அளிக்க வந்த விவசாயி
ADDED : ஜூலை 24, 2024 12:12 AM
ஊட்டி;தெருநாய்கள் கடித்த ஆட்டின் உடலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயி மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியை சேர்ந்த விவசாயி தம்பா கொடுத்த மனு:
நான் பல ஆண்டுகளாக ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் ஒன்றிணைந்து இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் ஆடுகளை கடித்து குதறுகின்றன.
ஊட்டி நகரில் மட்டும் இதுவரை, 30 ஆடுகள் இறந்து விட்டன.
மேலும், பல ஆடுகள் காயமடைந்துள்ளன. நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருநாய்கள் பொது மக்களையும் கடித்து காயப்படுத்தி வருகிறது.
எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தி, இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

