/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளாவில் கொடி படர்ந்த மின் கம்பம்
/
ஜெகதளாவில் கொடி படர்ந்த மின் கம்பம்
ADDED : ஆக 31, 2024 02:20 AM

குன்னுார்;குன்னுார்-கோத்தகிரி பகுதிகளில் மரங்கள் மற்றும் முட்புதர்கள் சூழ்ந்த இடங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கோத்தகிரியில் தாழ்வாக இருந்த மின்கம்பியில் அரசு பஸ் உரசி சென்றதால் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.
இதனை தொடர்ந்து, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டதுடன், மின்கம்பங்களில் முட்புதர்களும் கொடிகளும் சூழ்ந்ததை தன்னார்வலர்களுடன் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.
ஆனால், உபதலை மின்பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. குறிப்பாக, அருவங்காடு ஜெகதளா சாலையில் உள்ள மின்கம்பத்தின் 'ஸ்டே' ஒயரில், கொடி படர்ந்து, மின்சார சப்ளையாகும் கம்பி வரை படர்ந்துள்ளது. இவ்வழியாக காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. மக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.