/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா கார் மீது கவிழ்ந்த ராட்சத கிரேன்
/
சுற்றுலா கார் மீது கவிழ்ந்த ராட்சத கிரேன்
ADDED : ஏப் 19, 2024 01:52 AM

மஞ்சூர்;மஞ்சூர் அருகே மலைப்பாதையில் கேரளா சுற்றுலா பயணிகள் கார் மீது ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஒருவர் காயம் அடைந்தார்.
மஞ்சூர் அருகே கோரகுந்தா பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக ராட்சத கிரேன் வாகனம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை பணிகள் முடிந்த நிலையில் கிரேன் இயந்திரத்தை அதன் ஓட்டுனர் பிரகாஷ் என்பவர் இயக்கி சென்றுள்ளார்.
தாய்சோலை அருகே மலைப்பாதையில் சென்றபோது இயந்திர கோளாறு காரணமாக கிரேன் நிலை தடுமாறியதாக கூறப்படுகிறது.
டிரைவர் பிரகாஷ் கிரேனை சாலையோரமாக இயக்கியபோது எதிர்பாராதவிதமாக கிரேன் சாலையில் ஒரு பக்கமாக சாய்ந்து அவ்வழியாக வந்த கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கார் மீது கவிழ்ந்ததில் கார் சேதமானது.
காரில் பயணித்த ஐந்து பேரும் எவ்வித காயமும் இன்றி தப்பினர். டிரைவர் பிரகாஷ் காயமடைந்தார். இந்த விபத்தால், மஞ்சூர், கிண்ணக்கொரை, கோரகுந்தா இடையே பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

