/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நவீன சலவையகம் புதுமை திட்டம் ஆர்வமிருந்தால் மானியமும் உண்டு
/
நவீன சலவையகம் புதுமை திட்டம் ஆர்வமிருந்தால் மானியமும் உண்டு
நவீன சலவையகம் புதுமை திட்டம் ஆர்வமிருந்தால் மானியமும் உண்டு
நவீன சலவையகம் புதுமை திட்டம் ஆர்வமிருந்தால் மானியமும் உண்டு
ADDED : ஆக 09, 2024 01:45 AM
ஊட்டி:'நவீன சலவையகம் அமைக்க நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதை பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யாஅறிக்கை:
மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவீன சலவையகம் அமைக்க நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும்.
குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.