sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஒரு குடம் தண்ணீர் ரூ.20!;  குன்னுாரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு;  உள்ளூர் மக்களின் தாகத்தை தணிப்பது யாரு?

/

ஒரு குடம் தண்ணீர் ரூ.20!;  குன்னுாரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு;  உள்ளூர் மக்களின் தாகத்தை தணிப்பது யாரு?

ஒரு குடம் தண்ணீர் ரூ.20!;  குன்னுாரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு;  உள்ளூர் மக்களின் தாகத்தை தணிப்பது யாரு?

ஒரு குடம் தண்ணீர் ரூ.20!;  குன்னுாரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு;  உள்ளூர் மக்களின் தாகத்தை தணிப்பது யாரு?


ADDED : ஏப் 18, 2024 05:11 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் தொடரும் கோடைகால தாக்கத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை மற்றும் ஜிம்கானா, கரன்சி, பந்துமை, பாரஸ்ட்டேல் தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, 'கிரேஸ் ஹில்' நிலைய தொட்டிகளில் சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 100 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வரப்பட்ட எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தால், குன்னுார் நகரில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. மாதத்திற்கு, 3 அல்லது 4 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது.

வார்டுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரி, 26 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், எமரால்டு அணை வறண்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு ஏரியாவிற்கு, 6 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஜிம்கானா, கரன்சி, பந்துமை உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு சிம்ஸ்பார்க் அருகே, 9.25 லட்சம் ரூபாயில், ஜெனரேட்டருடன் கட்டப்பட்ட நீரேற்று நிலையமும் பூட்டப்பட்டு பயனின்றி கிடக்கிறது. பாரஸ்ட்டேல் தொட்டியும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

ஒரு குடம் தண்ணீர் ரூ.20


இந்நிலையில், குன்னுார் நகரில் கடைகளுக்கு ஒரு குடம் தண்ணீர், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பலர் தங்களது கிணற்று நீரை தள்ளு வண்டியில் கொண்டு வந்து சப்ளை செய்வதால் வியாபாரிகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது. மேலும், 500 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டியில் 'பிக்-அப்' மூலம் கொண்டு வரும் ஆற்று நீரை, 1000 ரூபாய் கொடுத்து வசதி படைத்த மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குன்னுார் 'ஹை பீல்டு' தடுப்பணையில் சில மாதங்களுக்கு முன்பு துார் வாரி,12 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து,நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்யாமல் விட்ட நிலையில் தற்போதைய வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி வறண்டு உள்ளது. இங்குள்ள ரேலியா அணையில் இருந்து மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், தண்ணீரின் அளவு, 30 அடியாக குறைந்துள்ளது.

மக்கள் கூறுகையில், 'தொடரும் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண தடுப்பணைகளை முறையாக துார்வாரி பராமரிக்க வேண்டும். மூடப்பட்ட நீரேற்று நிலையங்களை திறந்து முறையாக குடிநீர் வினியோகத்தை செய்ய வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us