/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பலி
/
ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பலி
ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பலி
ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பலி
ADDED : ஜூலை 02, 2024 12:36 AM

குன்னுார்:குன்னுாரில் ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ் டயரில் சிக்கி தலை நசங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னுார் டைகரில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர், 52. கட்டுமான தொழிலாளி. நேற்று காலை, 9:00 மணி அளவில் டிரம்ளா பகுதியில் இருந்து குன்னுார் நோக்கி ஸ்கூட்டியில் சென்ற போது, பணிக்கு தேவையான மட்டக்கோலை கால் அருகே வைத்து வந்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், குன்னுாரில் இருந்து பில்லி கம்பைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பெட்போர்டு பகுதியில் சில பயணிகளை ஏற்றி புறப்பட்டது. அப்போது ஆட்டோ, கார் முன்புறம் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது, ஸ்கூட்டியில் சென்ற சுரேந்தர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் தனியாக விழுந்ததுடன், இவரின் தலை அரசு பஸ் பின் டயரில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்பர் குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.