/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால தாமதமாக வரும் பஸ்: காத்திருக்கும் பயணியர்
/
கால தாமதமாக வரும் பஸ்: காத்திருக்கும் பயணியர்
ADDED : மே 21, 2024 12:08 AM

கோத்தகிரி;கோத்தகிரியில் கால தாமதமாக வரும் பஸ்சுக்காக பயணிகள் காத்திருப்பது தொடர்கிறது.
கோடை விழாவை ஒட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கவும், வாகன நெரிசலை தடுக்கவும் அரசு போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், 20 சுற்று பஸ்களை இயக்கியது.
அதற்காக, கோத்தகிரி மற்றும் ஊட்டி கிளைகளில் வழக்கம் போல் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனால், பஸ்கள் காலதாமதமாக பஸ் நிலையங்களுக்கு வந்து செல்கிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள், நடப்பாண்டு, அரசு பஸ்களிலேயே பயணித்து, மலர் கண்காட்சியை கண்டு களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மலர்கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, கோத்தகிரி பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு செல்ல பஸ்சிற்காக கால்கடுக்க காத்திருந்தனர்.
இதனை அடுத்து, காலம் கடந்து வந்த பஸ்சில், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் முட்டி மோதி, இருக்கை பிடித்து பயணித்தனர். இருக்கை கிடைக்காத பயணிகள் நின்று கொண்டு ஊட்டியை அடைந்தனர். கோடை விழா நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் நலன் கருதி, பஸ் இயக்கத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.

