/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ப்பு யானை கழுத்தில் சங்கிலியுடன் லெதர் 'பெல்ட்'
/
வளர்ப்பு யானை கழுத்தில் சங்கிலியுடன் லெதர் 'பெல்ட்'
வளர்ப்பு யானை கழுத்தில் சங்கிலியுடன் லெதர் 'பெல்ட்'
வளர்ப்பு யானை கழுத்தில் சங்கிலியுடன் லெதர் 'பெல்ட்'
ADDED : ஏப் 14, 2024 11:49 PM

கூடலுார்:முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு, கழுத்தில் கட்டப்பட்டும் சங்கிலியுடன், மீண்டும், 'லெதர் பெல்ட்' அணியும் முறையை வனத்துறையினர் செயல்படுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், தெப்பக்காடு, அபயராண்யம் யானை முகாம்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு, மூன்று குட்டிகள் உட்பட, 28 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர்.
இவைகளுக்கு காலை, மாலை வனத்துறை சார்பில் உணவு வழங்கப்படுவதுடன், பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இவ்வாறு வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்படும் யானையின் இருப்பிடத்தை, பாகன்கள் அறியும் வகையில் அதன் கழுத்தில் சங்கிலியுடன் மணி கட்டியுள்ளனர். கழுத்தில் சங்கிலியை நேரடியாக அணிவதால், அதனால் ஏற்படும் அழுத்தம், உராய்வு யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தது. இதை தடுக்கும் வகையில், தற்போது வளர்ப்பு யானைகள் கழுத்தில் சங்கிலியுடன், 'லெதர் பெல்ட்' இணைத்து கழுத்தில் கட்டி உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'வளர்ப்பு யானைகள் கழுத்தில், லெதர் பெல்டுடன் இணைக்கப்பட்ட சங்கிலியை அணிவித்து வந்தனர். காலப்போக்கில் சங்கிலி மட்டும் அணிவிக்கப்பட்டது. இதனால், ஏற்படும் அழுத்தம் காரணமாக, யானைகள் கழுத்தில் பாதிப்பு ஏற்படும் தடுக்க, பழைய முறைப்படி மீண்டும் சங்கிலியுடன் 'லெதர் பெல்ட்' இணைத்து வளர்ப்பு யானைகள் கழுத்தில் அணிவிக்கும் முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்,' என்றனர்.

