/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை குட்டியை வேட்டையாடி மரக்கிளையில் தொங்க விட்ட சிறுத்தை
/
காட்டெருமை குட்டியை வேட்டையாடி மரக்கிளையில் தொங்க விட்ட சிறுத்தை
காட்டெருமை குட்டியை வேட்டையாடி மரக்கிளையில் தொங்க விட்ட சிறுத்தை
காட்டெருமை குட்டியை வேட்டையாடி மரக்கிளையில் தொங்க விட்ட சிறுத்தை
ADDED : ஆக 17, 2024 01:04 AM
மஞ்சூர்;மஞ்சூர் காட்டெருமை குட்டியை வேட்டையாடி துாக்கி சென்று மரக்கிளையில் தொங்க விட்ட சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர் அருகே குந்தா துானேரி கிராமத்தை ஒட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது. சமீப காலமாக காட்டெருமை கூட்டம், கூட்டமாக குடியிருப்பை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் உலா வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
நேற்று மதியம், 4:00 மணியளவில் ஏராளமான காட்டெருமைகள் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் உலா வந்தது. காட்டெருமை கூட்டத்தை நோட்டமிட்ட சிறுத்தை, காட்டெருமை குட்டியை துாக்கி கொண்டு, 25 அடி உயரத்தில் உள்ள நாவல் மரத்தின் கிளையின் நடுவே தொங்க விட்டது. பின் பக்கம் கடித்து குதறியதால், அங்கேயே பலியான நிலையில் காட்டெருமை குட்டி தொங்கி கொண்டிருக்கிறது.
தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சப்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து சென்றது. மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.