/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரலோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; உயிர் தப்பிய டிரைவர் உயிர் தப்பிய டிரைவர்

ADDED : ஜூன் 22, 2024 12:07 AM
கோத்தகிரி:கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில், அதிக பாரத்துடன், மரலோடு ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், வெட்டப்படும் சில்வர் ஒக் மரங்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாமில்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
அதில், நிர்ணயிக்கப்பட்ட பாரத்தை விட, கூடுதலாக லோடு ஏற்றி செல்வது தொடர்கிறது.
இவ்வாறு லோடு ஏற்றும் லாரிகள், பகல் நேரங்களில் மறைவான இடங்களில் நிறுத்தப்பட்டு, இரவில் மட்டுமே, மேட்டுப்பாளையத்திற்கு செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு, கட்ட பெட்டு பகுதியை சேர்ந்த மர வியாபாரி, ஊட்டி சோலுார் பகுதியை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் மூலமாக லாரியை அனுப்பி வைத்துள்ளார்.
இரவு, 10:00 மணிக்கு மேட்டுப்பாளையம் மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரி, அரவேனு பகுதியில் பள்ளத்தில் இறங்கி, மரத்துண்டுகள் சிதறிய நிலையில், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். வளைவுகள் நிறைந்த மலை பாதையில் அதிக பாரம் ஏற்றுக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை உத்தரவு உள்ளது.
இதனை மீறி அதிக பாரத்துடன் வாகனங்களில் சென்று வருவது ஆபத்தானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவது அவசியம்.