/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நம்பிக்கையில்லா தீர்மானம் துணைத்தலைவர் பதவி இழப்பு
/
நம்பிக்கையில்லா தீர்மானம் துணைத்தலைவர் பதவி இழப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் துணைத்தலைவர் பதவி இழப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் துணைத்தலைவர் பதவி இழப்பு
ADDED : ஜூலை 10, 2024 01:35 AM
சூலூர்;கண்ணம்பாளையம் பேரூராட்சியில் நடந்த சிறப்பு கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், துணைத்தலைவர் சண்முகம் பதவி இழந்தார்.
சூலுார் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சி உள்ளது. 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க.,வை சேர்ந்த புஷ்பலதா தலைவராகவும், சண்முகம் துணைத் தலைவராகவும் உள்ளனர். உள்ளூர் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துணைத்தலைவர் சண்முகம், லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ., வில் சேர்ந்தார்.
இந்நிலையில், சண்முகம் மீது மற்ற கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம், செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக, தலைவர் உட்பட, 12 கவுன்சிலர்கள் ஓட்டளித்தனர். தீர்மானத்துக்கு எதிராக சண்முகம் உட்பட இரு கவுன்சிலர்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, சண்முகம் துணைத்தலைவர் பதவியை இழந்தார்.
செயல் அலுவலர் கூறுகையில், 'சிறப்பு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் குறித்த கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு பிறகு, புதிய துணைத்தலைவருக்கான தேர்தல் நடக்கும்' என்றார்