/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் தோண்டப்பட்ட கால்வாய் பணியால் மண் குவியல்
/
சாலையோரம் தோண்டப்பட்ட கால்வாய் பணியால் மண் குவியல்
சாலையோரம் தோண்டப்பட்ட கால்வாய் பணியால் மண் குவியல்
சாலையோரம் தோண்டப்பட்ட கால்வாய் பணியால் மண் குவியல்
ADDED : மே 06, 2024 10:51 PM

கூடலுார்:கூடலுார் தேசிய நெடுஞ்சாலையோரம், கழிவுநீர் அடைப்பை சீரமைக்க தோண்டப்பட்ட கால்வாயை சீரமைக்காததால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தனியார் பெட்ரோல் நிலையத்தை ஒட்டியுள்ள, நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியது.
இதனால், அப்பகுதியில் சுகாதார பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
அதனை சீரமைப்பதற்காக நகராட்சி சார்பில், 2ம் தேதி, பொக்லைன் மூலம் கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது. அதிலிருந்து அகற்றப்பட்ட மண், கழிவுநீர் கால்வாய் ஒட்டி சாலையோரம் போடப்பட்டது. நேற்று வரை கால்வாய் சீரமைக்கப்படவில்லை.
அங்குள்ள மண் குவியல் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, தோண்டப்பட்ட கழிவு நீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.