/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதை நடுவே மின்கம்பம்; சிரமத்தில் மக்கள்
/
நடைபாதை நடுவே மின்கம்பம்; சிரமத்தில் மக்கள்
ADDED : ஏப் 02, 2024 10:57 PM

கூடலுார்;'கூடலுார் நடைபாதை நடுவே, மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல, நடைபாதை ஓரத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலான நடை பாதை நடுவே உள்ள சில மின்கம்பங்கள், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. சிலர், அந்த மின்கம்பங்களில், தங்கள் கடையில் உள்ள பொருட்களை விளம்பரத்துக்கு வைத்துள்ளனர்.
இதனால், அப்பகுதியை கடந்து செல்ல மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மின் கம்பங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடை பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நடைபாதை நடுவே, உள்ள மின்கம்பங்கள், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. அவைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

