/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமுகை அருகே விபத்துக்களை குறைத்த ரவுண்டானா
/
சிறுமுகை அருகே விபத்துக்களை குறைத்த ரவுண்டானா
ADDED : மே 03, 2024 01:07 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே, நீலிபாளையம் பிரிவு சாலையில், ரவுண்டானா அமைக்கப்பட்டதால், விபத்துக்கள் குறைந்துள்ளன.
சிறுமுகை பேரூராட்சி மற்றும் பெள்ளேபாளையம் ஊராட்சி எல்லையில், சத்தியமங்கலம் சாலையில் உயர்மட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் அருகே சிறுமுகை, மேட்டுப்பாளையம், நீலிபாளையம் பிரிவு, காரமடை ஆகிய சாலைகள் ஒன்று சேர்கின்றன. இச்சாலை வழியாக பவானிசாகர், சத்தியமங்கலம், திம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
சாலைகள் ஒன்று சேரும் இடத்தில் அகலமான தார் சாலை உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த அகலமான தார் சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாநில நெடுஞ்சாலை துறையால், ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனால் இச்சாலையில் விபத்துகள் குறைந்துள்ளன.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் கூறுகையில், இச்சாலையில் ரவுண்டானா இல்லாத போது, சிறு, சிறு விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டன.
ரவுண்டானா அமைத்ததற்கு பின் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. ரவுண்டானாவால் வாகனங்களின் வேகம் குறைந்துள்ளது, என்றனர்.