/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க தனி குழு; ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு

ADDED : மே 01, 2024 10:49 PM

கூடலுார் : 'கூடலுார் அருகே, நெலாகோட்டை பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை கண்காணிக்க தனி வனக்குழு அமைத்து கண்காணிக்கப்படும்,' என, வன அலுவலர் தெரிவித்தார்.
கூடலுார் அருகே, நெலாகோட்டை பகுதியில் காட்டு யானைகள், தொடர்ச்சியாக குடியிருப்பு மற்றும் நகரில் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், கடைகள், வாகனங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் இரவில் அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் அசத்துடன் வசித்து வருகின்றனர். வன ஊழியர்கள், அவ்வப்போது அதனை கண்காணித்து விரட்டினாலும் அவை ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன், அனைத்து கட்சி நிர்வாகிகள், கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபுவை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, 'இப்பிரச்னைக்கு வனத்துறை தீர்வு காண வேண்டும்; அல்லது யானையை பிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
ஆர்.டி.ஓ., கூறுகையில், 'அப்பகுதியில் தனியாக 10 பேர் கொண்ட வனக்குழு, அமைத்து, தொடர்ச்சியாக அந்த யானைகளை கண்காணித்து, ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று மற்றப் பகுதிகளிலும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.