/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோயுடன் சுற்றி திரியும் பசுமாடு: பயணிகளுக்கு இடையூறு
/
நோயுடன் சுற்றி திரியும் பசுமாடு: பயணிகளுக்கு இடையூறு
நோயுடன் சுற்றி திரியும் பசுமாடு: பயணிகளுக்கு இடையூறு
நோயுடன் சுற்றி திரியும் பசுமாடு: பயணிகளுக்கு இடையூறு
ADDED : ஆக 13, 2024 01:57 AM

கோத்தகிரி;கோத்தகிரி பஸ் நிலையத்தில், பசுமாடு நோயுடன் சுற்றித்திரிவதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, பள்ளி நேரங்களில் பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக ரத்தம் சொட்டிய நிலையில், ஒரு பசுமாடு பஸ்நிலையத்தில் சுற்றித்திரிகிறது. பெரும்பாலான நேரங்களில் நடந்து செல்ல முடியாமல், நிழலில் படுத்து விடுகிறது. இதனால், பஸ்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பயணிகள் நடந்து செல் வதிலும் இடையூறு ஏற்படுவதுடன், துர்நாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நோயுடன் சுற்றித்திரியும் பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.