/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில எல்லையில் சேதமடைந்த சாலைக்கு கிடைத்தது தீர்வு; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : செப் 13, 2024 10:20 PM

கூடலுார் : தமிழக- கேரள எல்லையில் உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் சேதமடைந்த, சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கூடலுார் அருகே, கீழ் நாடுகாணி பகுதி, கேரள மாநில எல்லையில் உள்ளது. இந்த சாலையை மூன்று மாநில வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
அதில், கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் வருவாய் துறை சார்பில் நுழைவு வசூல் மையம் அமைத்து, நுழைவு வரி வசூல் செய்து வருகின்றனர்.
இச்சாலையில், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., துாரம் தமிழக பகுதியில் உள்ளது. இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து, சீரமைக்காமல் இருந்தது. ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று காலை இச்சாலையில் சேதமடைந்த குழிகளை மூடி, தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில்,'இப்பகுதியில் சேதமடைந்த சாலையில் உள்ள குழிகளை, தற்காலிகமாக சீரமைப்பது வரவேற்க கூடியது. எனினும், தொடரும் மழையில், சாலை மீண்டும் சேதமடையும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.