/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
/
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
ADDED : மார் 21, 2024 10:47 AM

பந்தலுார்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி நடக்க உள்ளது. அதில், பந்தலுார் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களுக்கு நேற்று பள்ளியில், முதல்வர் பிஜூஜோசப் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, தாளாளர் பாதர் ஜோர்ஜ் மாணவர்கள் தேர்வு சிறப்பாக எழுதவும், நம்பிக்கை மற்றும் மன தைரியம் ஏற்படவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து, அனைவருக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதுடன், மலங்கர கத்தோலி நீலகிரி மாவட்ட பங்கு தந்தை ஜேக்கப் மாணவர்களுக்கு பேனா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.