/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை
/
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை
ADDED : மே 23, 2024 11:49 PM

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு சிலை வைக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவை, 1848ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக் ஐவர் என்பவர் உருவாக்கினர்.
19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின், 1867ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளை சார்ந்த, 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளன. பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர், 1876ம் ஆண்டு ஜூன் 8 ம் தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்டீபன் சர்ச் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக புகழ் வாய்ந்த பூங்காவை அமைத்த, மெக் ஐவருக்கு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது, மெக் ஐவரின் சிலையை பூங்காவில் நிரந்தரமாக வைக்கும் பணிகளில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்த திறப்பு விழா நடக்க உள்ளது.