/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் திடீர் வனத்தீ: நான்கு ஏக்கர் எரிந்து சேதம்
/
கூடலுாரில் திடீர் வனத்தீ: நான்கு ஏக்கர் எரிந்து சேதம்
கூடலுாரில் திடீர் வனத்தீ: நான்கு ஏக்கர் எரிந்து சேதம்
கூடலுாரில் திடீர் வனத்தீ: நான்கு ஏக்கர் எரிந்து சேதம்
ADDED : மார் 29, 2024 08:48 PM
கூடலுார்:கூடலுார், தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் ஒட்டிய வனத்தில் ஏற்பட்ட தீயில், 4 ஏக்கர் பரப்பிலான வனம் எரிந்தது.
கூடலுார் பகுதியில் கோடை மழையும் ஏமாற்றி வருவதால், வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது தொடரும் வனத்தீயால் புல்வெளிகள் வன பகுதிகள் எரிந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை தேவர்சோலை அருகே தனியார் எஸ்டேட் ஒட்டிய, வனப் பகுதியில் திடீரென வனத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் தீ வேகமாக பரவியது.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை நிலை அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், 4 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டது. தொடரும் வனத்தீயினால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

