/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் ரயில் மோதியதில் வாலிபர் பலி
/
ஊட்டியில் ரயில் மோதியதில் வாலிபர் பலி
ADDED : மே 30, 2024 08:41 PM
ஊட்டி:நீலகிரி மலை ரயில் மோதி வாலிபர் பலியானார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம், ஊட்டி ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில், பர்னில் பேலஸ் பகுதியில் சென்றபோது, வாலிபர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த இன்ஜின் ஓட்டுனர், இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஐ., ராமன் தலைமையிலான ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில், தண்டவாளத்தின் அருகில் துாக்கி வீசப்பட்டு, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். சட்டைகள் கிழிந்திருந்தன. உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவரிடம் மொபைல் போன் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை. ரோஸ்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். அவர் எதனால் ரயில் மோதி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பின்னர் இது குறித்து கூறப்படும்' என்றனர்.