/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
37 மையங்களில் குரூப்-4 தேர்வு மொத்தம் 9,956 பேர் தேர்வுக்கு தயார்
/
37 மையங்களில் குரூப்-4 தேர்வு மொத்தம் 9,956 பேர் தேர்வுக்கு தயார்
37 மையங்களில் குரூப்-4 தேர்வு மொத்தம் 9,956 பேர் தேர்வுக்கு தயார்
37 மையங்களில் குரூப்-4 தேர்வு மொத்தம் 9,956 பேர் தேர்வுக்கு தயார்
ADDED : மே 31, 2024 11:33 PM
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், 37 மையங்களில், 9,956 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.
ஊட்டியில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 தேர்வுக்கு மாவட்டத்தில், 6 வட்டங்களில், 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 9,956 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு வரும், 9ம் தேதி காலை, 9:30 மணி முதல் பகல், 12:30 மணி வரை நடக்கிறது.
தேர்வை கண்காணிக்கும் பொருட்டு, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வாணையத்தின் விதிமுறைக்கு ஏற்ப, வினாத்தாள்; விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு காலை, 9:00 மணிக்குள் வரவேண்டும். 9:00 மணிக்கு மேல் வருகை தருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்கு தேவர்கள் செல்வத்துக்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதை, கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின் வசதி, அடிப்படை வசதியுடன், தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

