/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலா பஸ்: இரவில் கடும் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 27, 2024 12:30 AM

ஊட்டி,:ஊட்டி தொட்டபெட்டா அருகே சுற்றுலா வாகனம் நேற்று இரவு பழுதாகி நின்றதால், கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து, ஊட்டிக்கு, 50 பேர் பஸ்சில் சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களை கண்டு களித்து அவர்கள், கோத்தகிரிக்கு சென்ற போது, தொட்டபெட்டா சந்திப்பு அருகே, வளைவில் பஸ் திடீரென பழுதாகி நின்றது.
இதனால், இருசக்கர வாகனங்களை தவிர, இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, இரவு, 6:45 மணிமுதல், 8:30 மணிவரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள பஸ் மெக்கானிக் சிலர் வந்து, சாலையில் நின்ற பஸ்சை, சாலை ஓரத்திற்கு எடுத்து சென்றதை அடுத்து, போக்குவரத்து சீரானது. இதனிடையே, ஊட்டி, கோத்தகிரி மற்றும் கிராமபுறங்களில் இருந்து வந்த பயணிகள் பலர், தங்கள் கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.